‘சபாக்’ போன்ற படங்களை ஆதரிப்பது பார்வையாளர்களின் கடமை…!

இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் சபாக்.

இப்படம் முழுக்க முழுக்க ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழக்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் சமீபத்தில் தனது ட்ரைலரினை வெளியிட்டது. மேலும் இத்திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி நாளை திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக போர்கொடிகள் தற்போது எழுந்துள்ளது.

JNU மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த திபிகா படுகோனுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட வேண்டும் என நேற்று துவங்கி சமூக ஊடக போராளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் இந்து சமூகத்தின் பெயர் வில்லனாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறி தங்கள் போராட்டத்தை முன்வைத்துள்ளனர் .

லக்ஷ்மி அகர்வாலின் மீது ஆசிட் வீசியது நதீம் கான் என்னும் இஸ்லாமியர். ஆனால் இந்த திரைப்படத்தில் ராஜேஷ் என்னும் இந்து நபரின் பெயரை பயன்படுத்தி உள்ளனர் எனவும் போராட்டம் நீடித்து வருகிறது .

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மிக்காக பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர் அபர்னா பட் சபாக் தனக்கு கிரெடிட் தரவில்லை என்று குறிப்பிட்டு படத்திற்கு தடை கோரி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் சபாக் படத்தில் மனுதாரரின் பெயரை திரைப்படத் தயாரிப்பாளர் அங்கீகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.