வெள்ளித்திரை, சின்னத்திரை பணிகள் மீண்டும் நிறுத்தம்….!

நாளுக்கு நாள் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது .நாடெங்கும் ஊரடங்கில் உள்ளது .சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு.

நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் சென்னை அருகிலுள்ள 4 மாவட்டங்களுக்கு ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்புதான் இறுதிக்கட்டப் பணிகளும், சின்னத்திரை படப்பிடிப்புக்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு படங்களின் பணிகளும், சின்னத்திரை படப்பிடிப்புகளும் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடைபெறாது என்று ஃபெப்சி அறிவித்துள்ளது.