கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது .
இதனால் திரையரங்குகள் மூடப்பட்டது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.
இதனால் பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்து வருகின்றனர்.
சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் ஒரு வரமாக அமைந்துள்ளன. திரையரங்குகள் கிடைக்காமல் தவித்த பல படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகவுள்ளன.
அந்தகாரம், அண்டாவ காணோம், வா டீல், காக்டெயில், டேனி போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாவதைச் சமீபத்தில் உறுதி செய்தன.
இந்நிலையில் கரு. பழனியப்பன் நடித்துள்ள கள்ளன், குழந்தைகள் படமான மங்கி டாங்கி, தேவதாஸ் ஆகிய படங்கள் தி ஆலி (theally.com) என்கிற புதிய ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.
ராம் கோபால் வர்மாவின் புதிய படமான நேக்ட், அந்த ஓடிடி தளத்தில் வெளியானதால் அதற்கு நல்ல கவனம் கிடைத்தது.
தி ஆலி தளத்தில் போஸ் வெங்கட் இயக்கிய கன்னி மாடம், அதர்வா நடித்த செம போதை ஆகாத, காதல் கசக்குதய்யா ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன.