அமெரிக்காவில் தொடங்கவுள்ள உலகின் மிகப்பெரிய இறுதிக் கட்ட தடுப்பு மருந்து சோதனைகள்: ஆண்டு இறுதியில் வெளியிட இலக்கு

கோவிட் -19: மாடர்னா இன்க் மற்றும் ஃபிஷ்ஸர் இன்க் நிறுவனங்கள் அமெரிக்காவில் அவர்களின் தடுப்பு மருந்துகளுக்கு 30,000-பேர் பங்கு கொண்ட சோதனைகளை மேற்கொண்டன.

கோவிட் -19 தடுப்பூசி: மாடர்னா இன்க் மற்றும் ஃபிஷ்ஸர் இன்க் அமெரிக்காவில் அவர்களின் தடுப்பு மருந்துகளுக்கு 30,000 பேர் பங்கு கொண்ட இரண்டு சோதனைகளை மேற்கொண்டுள்ளன. இரு தடுப்பு மருந்துகளும் ஒழுங்குமுறை ஒப்புதல் பெற தேவையான தெளிவுகளை தெளிவுபடுத்தலாம் என்றும் மற்றும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பரவலான பயன்பாட்டைத் தொடங்கலாம் என்றும் செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, இந்த தடுப்பு மருந்துகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன என்றும்,  இது பாரம்பரியத்தை விட விரைவான வளர்ச்சி மற்றும் உற்பத்தியை அனுமதிக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய முந்தைய அனுபவம் இல்லை.

COVID-19 தடுப்பு மருந்தின் மிகப்பெரிய சோதனை அமெரிக்காவில் நடந்து வருவதாக அசோசியேட்டட் பிரஸ் இன்று தெரிவித்துள்ளது. சுமார் 30,000 அமெரிக்கர்களில் முதலாவது அமெரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தைப் பெறத் தொடங்கியுள்ளனர். தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் மாடர்னா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்தின் இறுதி கட்ட சோதனை இதுவாகும். அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் பல தான்னார்வர்களுக்கு இந்த தடுப்பு மருந்து மற்றும் முன்னறிவிக்காமல் தடுப்பு மருந்தைப் போன்ற ஒரு போலியும் ஒப்பீட்டு பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

A Pfizer sign is pictured at their Headquarters in the Manhattan borough of New York City, New York, U.S., July 22, 2020. REUTERS/Carlo Allegri

இதற்கிடையில், இந்தியாவில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா கோவிட் -19 தடுப்பு மருந்தை  சோதனை செய்வதற்காக ஐந்து நகரங்களை  அரசாங்கம் தேர்ந்தெடுத்து அளித்துள்ளது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா கோவிட் -19 தடுப்பு மருந்தின் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட மனித சோதனைகளுக்கு நாடு முழுவதும் ஐந்து நகரங்கள்  தயாராக உள்ளன என்று பயோடெக்னாலஜி (டிபிடி) செயலாளர் ரேணு ஸ்வரூப் கூறியதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பு மருந்தின் மனித சோதனைகள் ஒரு இன்றியமையாத படியாகும்.

ஆக்ஸ்போர்டு மற்றும் அதன் பங்குதாரர் அஸ்ட்ராஜெனிகா, உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பாளரான ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.  முதல் இரண்டு கட்டங்களுக்கான சோதனை முடிவுகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. ஸ்வரூப்பின் கூற்றுப்படி, டிபிடி இந்தியாவில் எந்தவொரு கோவிட் -19 தடுப்பு மருந்து தயாரிப்பு முயற்சியிலும் ஒரு பங்குதாரராக இருக்கும். அதன் மூலம் அது நிதியுதவி அளிக்கும் மேலும்  ஒழுங்குமுறை அனுமதிகளை எளிதாக்கும் என்றார். மேலும் கூறும்போது, டிபிடி இப்போது 3 ஆம் கட்ட மருத்துவ தளங்களை அமைத்து வருகிறது என்றும், பல இடங்களில் அது  ஏற்கனவே அவற்றில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார். அது மட்டுமின்றி, இப்போது ஐந்து நகரங்கள் 3 ஆம் கட்ட சோதனைகளுக்கு தயாராக உள்ளன,” என்று ஸ்வரூப் கூறினார். ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தின், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு ஸீரம் நிறுவனம் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டி.சி.ஜி.ஐ) அனுமதி கோரியுள்ளது.

தென் கொரிய தடுப்பூசி

மைக்ரோசாப்ட் கார்ப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்-க்கு எழுதிய கடிதத்தில், நாட்டின் எஸ்.கே. பயோ சயின்ஸ் அடுத்த ஜூன் மாதத்திற்குள் 20 கோடி (200 மில்லியன்) கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிட்களை  உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. கேட்ஸ் இந்த தென் கொரிய மருந்து நிறுவனத்தை ஆதரிக்கிறார்.

நாம் அறிந்தவரை, அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் தென் கொரியாவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறார். COVID-19 தடுப்பு மருந்து உருவாக்கம் மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்த, கேட்ஸ் அறக்கட்டளை எஸ்.கே. பயோசைன்ஸுக்கு $3.6 மில்லியன் வழங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு தயாரிப்பில் உள்ள தடுப்பு மருந்து உற்பத்திக்கு, எஸ்.கே. பயோ சயின்ஸ் அஸ்ட்ராஜெனிகா பி.எல்.சி உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மாடர்னா நிறுவன தடுப்பு மருந்து

இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய COVID-19 தடுப்பு மருந்து ஆய்வு திங்களன்று அமெரிக்காவில் திட்டமிட்டபடி, 30,000 தன்னார்வலர்களின் பங்கேற்ப்புடன் தொடங்கியது. இந்த தடுப்பு மருந்தை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் மாடர்னா இன்க் இணைந்து உருவாக்கியுள்ளது. இது உலகளாவிய தடுப்பு மருந்து சோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ள மருந்துகளில் முன்னணியில் உள்ளதாகும்.

ஆக்ஸ்போர்டு, ஜான்சன் & ஜான்சன், ஃபிஷர் தடுப்பு மருந்து சோதனைகள்

ஆகஸ்டில், ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தின் இறுதிகட்ட சோதனைகளின் இறுதி சோதனை தொடங்கும். ஜான்சன் அண்ட் ஜான்சன் தனது தடுப்பு மருந்தை செப்டம்பர் மாதத்திலும், அக்டோபரில் நோவாவாக்ஸிலும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கோடையில் ஃபிஷர் இன்க் தனது 30,000 தன்னார்வலர்களுடனான பெரும் ஆய்வை நடத்த திட்டமிட்டுள்ளது என்று ஏபி தெரிவித்துள்ளது.

Thank you: Financial Express

You may have missed