பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது.

மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுதான் உண்மையான காரணமா என்பது பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே உள்ளுறுப்பு அறிக்கை வெளிவந்துள்ளது, இப்போது toxicology, litigation mark, nail sampling, stomach wash போன்ற தகவல்களும் கலினா தடயவியல் ஆய்வகத்திலிருந்து (Kalina Forensic Lab )வந்துள்ளன.

Stomach Wash அறிக்கையில் சுஷாந்த் சிங்குக்கு விஷம் எதுவும் கொடுக்கப்படவில்லை அல்லது விஷம் போன்ற எதையும் அவர் எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

Nail sampling அறிக்கையில் மரணத்தின் போது எந்த போராட்டமும் இல்லை . தற்கொலைக்குப் பிறகு அவரது வாயிலிருந்து வெளியே வந்த நுரை அவரது துணிகளில் விழுந்துள்ளது, அது உலர்ந்த பின் ஒரு வெள்ளை கறை போல் இருந்தது.

The ligature report அறிக்கையில் மரணத்தின் போது எந்த காயமும் போராட்டமும் இல்லை .

முன்னதாக, ஜூலை 11 அன்று, இந்த வழக்கோடு தொடர்புடைய உயர் அதிகாரிகள் தடயவியல் குழுவுடன் தொடர்புடைய ஐந்து அதிகாரிகளுடன் தனித்தனியாக ஜூலை 13 அன்று சந்தித்ததை அறிவோம்.. போலீஸ் வட்டாரங்களின் படி, தடயவியல் விசாரணையின் அறிக்கை மும்பை போலீசில் வரும் 15 முதல் 20 நாட்கலுக்குள் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.