திருச்சி:

றந்தாங்கி அருகே ஆழ்துறை கிணற்றில் சிக்கிய 2வயது குழந்தை சுர்ஜித்தின், உடல் 4 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில்  மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட செயல் சுமார் 20 நிமிடம் நீடித்ததாகவும், இந்த பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 15 முக்கிய வீரர்கள் ஈடுபட்டதாகவும், இறுதி நேரத்தில் நடைபெற்ற பரபரப்பு  தகவல்கள் வெளியாகி உள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட சுர்ஜித்

கடந்த 25 ஆம் தேதி மாலை ஐந்தரை மணி அளவில்  தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில், குழந்தையை மீட்கும் பணி 5 நாளாக நடைபெற்றது. இறுதியில் நேற்று அதிகாலை குழந்தையின் சடலமே மீட்கப்பட்டது.

மீட்பு பணிகளில் பல்வேறு துறையினர் உள்பட தேசிய பேரிடர் மீட்பு படையினர், நெய்வேலி சுரங்க அதிகாரிகள், ஓன்என்ஜிசி அதிகாரிகள் குழு என பல தரப்பினரும் ஈடுபட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டுவந்த நிலையில், 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்பதில் கடும் சவால்களை சந்திக்க நேர்ந்தது. அந்த பகுதியில் உள்ள கடுமையான பாறை காரணமாக குழந்தையை மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

தமிழக அமைச்சர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்பு பணிகளை கண்காணித்து வந்த நிலையில், சுர்ஜித் நலமுடன் மீண்டு வர வேண்டும் என்று அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை மேற்கொண்டு வந்த நிலையில், குழந்தை சுர்ஜித் அனைவரையும் மீளா துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டான்.

இதற்கிடையில், பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளையில் இறங்கிய வீரர், உள்ளே இருந்த துர்நாற்றம் வீசுவதாக தகவல் தெரிவித்ததாக அதிகாலை 2.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த  வருவாய் துணை ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறினார். இதனால் குழந்தை இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  சுஜித் சிக்கியிருந்த போர்வெல்லில் இருந்து துர்நாற்றம் வீசுகிறதா என்பதை அறிய அரசு மருத்துவர்கள் குழுவினரும் ஆய்வு செய்து உறுதி செய்தனர்.  இதைத் தொடர்ந்து, அதிகாலை 2 மணியளவில் ஒரு இறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, குழந்தையின் உடலை மீட்கும் போராட்டம் தொடர்ந்தது. போர்வெல் மூலம் அருகில் குழித்தோண்டுவதை நிறுத்திய மீட்புக்குழு,  ஆழ்த்துளை கிணற்றின் வழியாகவே சுஜித்தின் உடலை மீட்கப் போராடின.

மூத்த அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 உறுப்பினர்கள் மட்டுமே இறுதி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் தேசிய பேரிடர் நிவாரணப் படை, மாநில பேரிடர் நிவாரணப் படை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை உறுப்பினர்கள் அடங்குவர். இந்த குழுவினருடன் என்.டி.ஆர்.எஃப் இன் உபகரணங்கள் தவிர, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள்  மற்றும் தன்னார்வலர்களான நாமக்கலைச் சேர்ந்த ஏ.வெங்கடேஷ் மற்றும் மணப்பரை ரூபன் ஆகியோர் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டனர்.

இவர்கள் குழந்தையின் உடலை வெளியே எடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். குழந்தையின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அதை மீட்பதிலும் சிக்கல் நீடித்து. அதிகாலை 3 மணிக்கு உடலை மீட்கும் பணி தொடங்கியது.  இந்த நடவடிக்கை சுமார் 20 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.‘‘

சுர்ஜித் உடல் நல்லடக்கம்

சுஜித்தின் உடல் சுமார் 88 அடி ஆழத்திலிருந்து 20 நிமிடங்களுக்குள் வெளியேற்றப்பட்டதாக உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி அதிகாலை 4.30 மணிக்கு சுர்ஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. உடல் சிதைந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் இருந்தால், அதை அப்படியே ஒரு துணியில்வைத்து கட்டி, பிரேத  பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அரசு மருத்துவர்கள் குழுவும் கலந்து கொண்டனதாக கூறப்படுகிறது.  பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உடனே அடக்கம் செய்யப்பட்டது.

சுமார் 80 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மீட்பு முயற்சி தோல்வியில் முடிந்ததால் மீட்புக்குழுவினர், அமைச்சர்கள் என அங்கிருந்தவர்கள் சோகத்தில் மூழ்கினர். சுஜித்தின் குடும்பத்தினரும் சொல்னொனா துயரத்தை சந்தித்தனர்.

அதைத்தொடர்ந்து அவரது மதச்சடங்குபடி, பிரார்த்தனை செய்து  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பாத்திமா புதுரில் சுஜித் வில்சன் அடக்கம் செய்யப்பட்டார்.

ஆழ்துளை கிணறு மூடப்படும் காட்சி

இதையடுத்து,  சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு உள்பட, சுஜித்தை மீட்க தோண்டிய குழிக்கு மீட்புக்குழிகள் மூடப்பட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.