சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி ஆண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படாது என்று யுஜிசி தெரிவித்தது.  இதையடுத்து, இறுதி செமஸ்டர் தேர்வுகள் குறித்து நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் தேர்வு தேதிகளை அறிவித்து வருகிறது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம், இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நடத்தப்பட உள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,  இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணிநேரம் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணையை யும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழக தேர்வு வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் நிலையில் தற்போது தேர்வு நேரம் ஒரு மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் ஆன்லைனில் தேர்வு நடக்கிறது.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.