‘பிஸ்கோத்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டும் படக்குழு….!

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘பிஸ்கோத்’.

தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக நடித்துள்ளார். இது அவருக்கு 400-வது படம்.

கொரோனா ஊரடங்கினால் இதன் இறுதிக்கட்டப் பணிகள் பாதித்தது. தற்போது தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

இம்மாத இறுதிக்குள் முதல் பிரதி தயாராகிவிடும்” என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார் இயக்குனர் கண்ணன்.