தமிழகம் : ஜனவரி 31 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை

ரும் 31 ஆம் தேதி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு கூட்டத்தில் காங்கிரஸ், அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட 9 அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். அனைத்துக் கட்சிகளின் கருத்தை கேட்டறிந்த தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாகு இந்த மாதம் 4 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவித்தார்.

ஆனால் தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாகு, “வாக்காளர்கள் 2 அல்லது 2 க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளது கண்டறியப்பட்டது. அதை நீக்கும் பணிகள் நடைபெறுவதால் கால அவகாசம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது.

எனவே வரும் 21 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட எண்ணி இருந்தோம். ஆயினும் இரட்டைப் பதிவுகளை நீக்கும் பணி இன்னும் முழுமையாக நிறைவு அடையவில்ல்லை. அந்தப் பணிகள் இன்னும் தொடர்கிறது. ஆகவே இறுதி வாக்காளர் பட்டியலை வரும் 31 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்” என அறிவித்துள்ளார்.