சிகாகோ:

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்குப் பிறகு, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் சாஃப்ட்வேரை மேம்படுத்தப்போவதாகவும், பைலட் பயிற்சியை மாற்றியமைக்கப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த மார்ச்ச 10-ம் தேதி எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 5 மாதங்களில் இரு முறை நடந்த விபத்துக்கு போயிங் விமானத்தின் குறைபாடே என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இது குறித்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் இயங்கும் போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போயிங் விமானத்தின் தொழில் நுட்பத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம். அதற்காக சாஃப்ட்வேரை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்றனர்.