குஜராத்:
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் குஜராத் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் உச்சகட்டமாக 1.82 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உயர் அதிகாரிகள் ஆகியோர் சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின் மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் குஜராத் கல்வித்துறை அறிவித்துள்ளது.