சென்னை

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை முதல் மழை வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட மழை பெய்யாத தால் ஆறு குளங்களில் நீர் இல்லாமல் வறட்சி சூழல்நிலவுகிறது.

இந்நிலையில் வங்காள விரிகுடாவின் தெற்குப்பகுதியிலும் பூமத்திய ரேகைக்கு அடுத்திருக்கும் இந்திய பெருங்கடல் பகுதியிலும் குறைந்த காற்றழுத்தம் நிலவுவதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுநிலையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தெற்குப் பகுதியில் சில இடங்களில் இன்றே மழை தொடங்கிவிடும் எனவும் வடக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. இருப்பினும்,  குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் சென்னைக்கு இந்தமழை எந்த அளவுக்கு உதவும்  என்று தெரியவில்லை.