27ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்தை ஒளிப்பதிவு செய்யப்போகும் சந்தோஷ் சிவன்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் பதிவு செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

சமீபத்தில் வெளியான பேட்ட படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சர்க்கார் புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அரசியல் படத்தில், ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இந்த படத்தில்,  தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரஜினியின் புதிய படம் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வரும் மார்ச் மாத இறுதியில் படப்பிடிப்பு தொங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் மம்முட்டியுடன் இணைந்து ரஜினி நடித்த தளபதி படத்தில் ஒளிப்பதிவை ஏற்றிருந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ரஜினி படத்துக்கு ஒளிப்பதிவை கவனிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதை வரவேற்று  தனது டிவிட்டர் பக்கத்தில்,  தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி