Random image

அருண்ஜெட்லியை சந்தித்ததாக விஜய்மல்லையா தகவல்’: அருண்ஜெட்லி ‘அலறல்’

டில்லி:

ங்கி கடன் காரணமாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தான் ‘நாட்டைவிட்டு வெளியேறும் முன் அருண்ஜெட்லியை சந்தித்ததாக இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் விளக்கம் தெரிவித்து உள்ளார்.

அதில், நான் விஜய் மல்லையாவை சந்திக்கவே இல்லை  மறுப்பு தெரிவித்து உள்ளார். விஜய்மல்லையா
கூறுவதில் உண்மையே  இல்லை என  அருண் ஜெட்லி அலறியடித்துக்கொண்டு பதில் தெரிவித்து உள்ளார்.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை நாடு கடத்தும்படி, வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று  ஆஜரானா விஜய் மல்லையா, செய்தியாளர்களை சந்தித்போது, ஜெனீவாவில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க இருந்ததால், நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து, வங்கிகளுடன் சமரசம் செய்ய தயார் எனவும், கடன்களை திரும்ப செலுத்துவதாக கூறி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். இது தான் உண்மை. என் மனசாட்சி தெளிவாக உள்ளது என்று கூறினார்.

விஜய்மல்லையாவின் இன்றைய தகவல் நாடு முழுவரும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், விஜய்மல்லையா கூறிய தகவல் குறித்தும், விஜய்மல்லையா  எப்படி இந்தியாவை விட்டு  வெளியேற அனுமதிக்கப்பட்டார்  என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி உள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர்  விஜய் மல்லையா பதில் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், விஜய் மல்லையா கூறியதில் “உண்மை” இல்லை என்றும், மல்லையா “பொய்யை உண்மை போல” கூறியுள்ளார். அதற்காக அவர் கூறுவது “உண்மை ஆகாது” என்றும், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், நான் அவரை(விஜய் மல்லையா) சந்திக்கவில்லை. அவர் கூறுவதில் முற்றிலும் உண்மை இல்லை’ என்று கூறியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்து “உண்மை நிலை” என்று கடிதத்தை பதிவு செய்துள்ளார்.