அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் இன்னும் முடிவடையவில்லை. வங்கிகள் அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.பல வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படவில்லை. அதனால், ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்குடனும், அடுத்த ஆண்டு, மார்ச், 31க்குள் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன், தேவையான வாடிக்கையாளருக்கு, ‘பான்’ எனப்படும், வருமான வரி கணக்கு எண்ணை இணைப்பதிலும், வங்கிகள் அக்கறையுடன் செயல்பட வேண்டும். ரொக்கப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கக் கூடாது. ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும்.

‘ரூபே’ கார்டுகள் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும். நாட்டில், பெரிய வங்கிகளுக்கு தேவை அதிகம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.