டெல்லி:
த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது மேலும்  நிவாரண அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் முடங்கிப்போன தொழில் வளத்தை பெரும் நோக்கில் “சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்ளை  மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார்.
நேற்று முதல்கட்டமாக   சிறு குறு, நடுத்தர தொழில்துறைக்கு கடன் உதவி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். மொத்தம் 3.6 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று 2வது நாளாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று  மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள சந்திப்பின்போது,  கொரோனா பொருளாதார நிவாரண திட்டங்களை அறிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று இரவு மத்தியஅரசு, பிரதமரின் நிவாரண நிதியில் ரூ.3100 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.