சட்டவிரோத சுவிஸ் டெபாசிட் மீது கடும் நடவடிக்கை…பியூஷ் கோயல்

டில்லி:

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 50 சதவீதம் உயர்ந்து ரூ. 7 ஆயிரம் கோடி என்ற நிலையில் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டின் இந்த நிலவரத்தை அந்நாட்டின் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவோம் என்று கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் இதற்கு நேர்மாறாக சுவிஸ் வங்கிளில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரித்துள்ளது. இதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘‘சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் அனைத்து டெபாசிட்களும் கருப்பு பணம் என்று எப்படி கருதமுடியும். எனினும் சட்ட விரோதமாக டெபாசிட் செய்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ராஜாங்க உறவின் அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் இருந்து அனைத்து வங்கி கணக்கு விபரங்களையும் பெற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். .