டெல்லி:

ந்தியர்களின் கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய மோடி அரசு குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது, அந்த வங்கி கணக்குகளை வெளியிட மறுப்பு தெரிவித்து உள்ளது. அது ரகசியம் என்று கூறி மறுத்து  உள்ளது.

வெளிநாடு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமக்களின் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்போவதாக மக்களை ஏமாற்றி கடந்த 2014ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது மோடி தலைமையிலான மத்திய அரசு.

ஆனால், கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிக்கொண்டே, பணமதிப் பிழப்பு, ஜிஎஸ்டி என்ற மக்கள் விரோத நடவடிக்கைளை மேற்கொண்டு, மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியது.

இருந்தாலும், ராமர்கோவில் போன்ற விவகாரங்களை கையில் எடுத்து, இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஆனால், பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டின் சிறுதொழில்கள் அடியோடு அழிக்கப்பட்டு வரும் நிலையில், பெரும் தொழில்களும் வரலாறு காணாத பேரிழப்பை சந்தித்து வருகின்றன. இதனால்,  நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி சீரழிந்து வருகிறது.

இதற்கிடையில், மக்களை ஏமாற்றும் வகையில், இதையடுத்து, இந்த வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள இந்தியாவும் சுவிஸ் நாடும் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தன. அதன்படி, 1955 முதல் செயல்பாடு இல்லாத வங்கி கணக்குகளின் பட்டியலை சுவிஸ் அரசு 2015-ம் ஆண்டு வெளியிட்டது. அதில் இந்தியாவை சேர்ந்த 10 பேரின் கணக்கு உள்பட 2 ஆயிரத்து 600 பேரின் வங்கி கணக்குகள் இடம் பெற்று இருந்தன. ஆனால், அந்த பணத்துக்கு இந்தியர்கள் தரப்பில் யாரும் உரிமை கோர முன்வரவில்லை.

சுவிஸ் வங்கி பணத்துக்கு உரிமை கோருபவர்கள், கருப்பு பண விவகாரத்தில் சிக்க வேண்டியது இருக்கும் என்பதால், அந்த பணத்தை பெற யாரும் முன்வரவில்லை. இதனால் இந்தியர்களின் பணம் சுமார் 320 கோடி ரூபாயை அந்த நாடே எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.

இதற்கிடையில்,  சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் குறித்த தகவல்களை சுவிஸ் அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இந்தியாவுக்கு வழங்கியது. மேலும் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் குறித்து, சுவிஸ்அரசு, இந்தியாவுக்கு வழங்கி உள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்பட சமூக ஆர்வலர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால், அது ரகசியம் என்று கூறி, இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள மத்திய நிதி அமைச்சகம் மறுத்துவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு பணத்தை மீட்டு, ரூ.15 லட்சம் தருவதாக கூறிய பாஜக அரசு, தற்போது சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் குறித்த தகவலை தெரிவிக்கவே…. அது ரகசியம் என்று மறைத்து வருவது…..மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.