உடனடியாக ரூ. 5 லட்சம் வரையிலான வரி பிடித்தத்தைத் திருப்பி அளிக்க அரசு உத்தரவு

டில்லி

திருப்பி அளிக்க வேண்டிய வருமான வரித் தொகை ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அதை உடனடியாக அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு இட்டுள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு 21 நாட்கள் தேசிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.  இதனால் பலருக்கு வருமான இழப்பு ஏற்பட்டு கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதையொட்டி மத்திய அரசு பல பொருளாதார சலுகைகளை அறிவித்து வருகிறது.  ஏற்கனவே கடந்த வாரம் நிதி அமைச்சர் ரூ.1.7 லட்சம் கோடிக்குச் சலுகை திட்டங்கள் அறிவித்தார்.

இன்று மத்திய நிதி அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “திருப்பி அளிக்க வேண்டிய வருமான வரித்தொகை ரூ.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் அதை உடனடியாக அளிக்க வேண்டும்

அத்துடன் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூ.18000 கோடியை விடுவிக்க வேண்டும்.   இதன் மூலம் ரூ.14 லட்சம் வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.

சிறு குறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட சுமார் 1 லட்சம் பேர் பயனடைய ஏதுவாக அனைத்து ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டி தொடர்புடைய வரிப்பிடித்தத்  தொகைகளும் விரைவில் விடுவிக்கப்பட உள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி