நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களின் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை :

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் நிலவி வரும்  நிதி சிக்கலை குறைக்கும் வகையில், தற்போது சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் மதிப்பூதியம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படும் என்றும் தமிழக நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி