சத்தீஸ்கர்:

மாநிலத்தில் நிலவி வரும் பண நெருக்கடி பிரச்சினை விரைவில் தீரும் என சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் கூறி உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம்,  போபால், வாரணாசி, ஐதராபாத்  போன்ற  பல நகரங்களில் கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்குள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணமும் இல்லை… புதிதாக பணம் வைக்கப்படாமல் இருப்பதால், ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளன.

இதுபோல மும்பை, டெல்லி, நகரங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லை. குஜராத், பீகார் மாநிலங்களிலும் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாததால் மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது.  இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்த எந்த  புகாரையும்  வங்கி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இது பல மாநிங்களில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் இப்பிரச்சினை விரைவில் தீரும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இ,துகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதித்துறை இணை மந்திரி எஸ்.பி. சுக்லா, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணப்பிரச்சினை  3 நாட்களில் சரிசெய்யப்படும் என்றும் உறுதி கூறி உள்ளார்.