அன்புச்செழியன் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு! இன்று விசாரணை?

சென்னை,

டத்தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ள பைனான்சியர் அன்புசெழியன் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் நடிகர் சசிகுமாரின் உறவினரான  இணை தயாரிப்பாளர் அசோக்குமார் கடந்த வாரம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தன் தற்கொலைக்கு  காரணம் பைனான்சியர் அன்புச்செழியன்தான் என்றும்,  அவரது தொல்லை தாங்காமல் அவமானத்தால் இந்த முடிவை மேற்கொள்கிறேன். என்று எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இதன் காரணமாக அன்புசெழியன் தலைமறைவானார். அவர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக ஒரு சிலரும், வேறுசிலர் அவர் வெளிநாடு தப்பிவிட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், அசோக்குமாரின் மரணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவான அன்புசெழியனை தேடி வருகிறார்கள்.

அன்புசெழியனின்  நண்பர் முத்துக்குமார் என்பவரையும் இன்னொரு நண்பரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது அன்புசெழியன் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்புச்செழியன்  முன் ஜாமீன் கேட்டு சென்னை  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Also read

தலைமறைவு ஃபைனான்சியர் அன்புச்செழியன் நண்பரை வளைத்தது காவல்துறை