ஃபைனான்சியர் அன்பு நியாயமானவர், மரியாதையானவர்!: இயக்குநர் சுந்தர்சி ( ஆடியோ)

--

சோக்குமார் மரணத்துக்குக் காரணம் ஃபைனான்சியர் அன்புதான் என்று விஷால், ஞானவேல்ராஜா உட்பட சிலர் சொல்லிக்கொண்டிருக்க.. இன்னொரு புறம், “அன்பு நாகரீகமானவர், நல்லவர்” என்று வேறு சில சினிமா பிரபலங்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர்களது பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர், பிரபல திரைப்ப இயக்குநர் சுந்தர்.சி.

அன்பு – சுந்தர்.சி

அவர், “நான் கடந்த எட்டு வருசமா அன்பு அண்ணன்கிட்டதான் ஃபைனான்ஸ் வாங்கிட்டிருக்கேன். அவரைப்பத்தி  வர்ற நியூஸ் ஆச்சரியமா இருக்கு. இப்ப  நான் பண்ணிக்கிட்டிருக்கிற கலகலப்பு 2 படத்தக்கும் அவர்கிட்டதான் பணம் வாங்கியிருக்கேன். சிலர் சொல்றது மாதிரி ஏகப்பட்ட டாக்கமெண்ட் எல்லாம் அன்பு அண்ணன் வாங்கிறதே இல்லை. செக், அந்த படத்துக்க்காக இவ்வளவு வாங்கறோம் என்கிற குறிப்பு.. இதுதான் அவர் வாங்கிக்குவார்.  மத்தபடி பிளாங்க் பேப்பர்..டாக்குமெண்ட் எல்லாம் அவர் வாங்கறதில்லே.

அவர்கிட்ட பணம் வாங்கிட்டு சில சமயம், பணம் கொடுக்க எனக்கு டிலே  ஆனது உண்டு. எனக்கே மனசாட்சி உறுத்தும்.. உடனே அவருக்கு  போன் செய்வேன்.. அவரு பரவாயில்லை, வந்தவுடனே கொடுங்க என்பார்..

சில பல பைனான்சியர்கள் பணம் தரலேன்னா கழுத்துல கத்தி வப்பாங்க.. ஆனா அன்பு அண்ணன் அப்படி அல்ல.. நெருக்கடியான நேரத்துல விட்டுக்கொடுத்திருக்கிறார்.

இத்தனை வருசத்துல அவர்கிட்ட எனக்கு சின்ன கசப்பான அனுபவம் கூட கிடைச்சது கிடையாது. அவர்கிட்ட நடுராத்தரியில பணம் வேணும்னாலும் பணம் கேட்கலாம்

அன்பு அண்ணன் நியாயமான பைனான்சியர் அவர். என்றைக்கும் அவரோட சப்போர்ட் எனக்கு உண்டு” என்று சொல்லியிருக்கிறார், சுந்தர்.சி.

அவர் பேசியிருக்கும் ஆடியோ…