“இப்படியும் ஒரு கோணம் சொல்லப்டுகிறது” என்கிற முன்குறிப்புடன் நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப்  தகவல்கள்:

நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது பட நிறுவன தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். “வாங்கிய கடனுக்கு வட்டி கேட்டுஅன்புச் செழியன் மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்டேன்” என்று அவர் எழுதி வைத்திருந்ததாக ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

அன்புச் செழியன் தலைமறைவாகிவிட்டார். அவரைக் காவல்துறை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்புச்செழியனால் பாதிக்கப்பட்ட திரைத்துறையினர் சிலர் இன்று கூடி ஆலோசித்து, அடுத்தகட்ட  நடவடிக்கை எடுக்க திட்டமிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் திரைத்துறையில், அன்புவுக்க நெருக்கமான சிலர் அவரை நல்லவர் என்கி றார்கள். “தற்போதைய சூழலில் எங்களது பெயரை வெளியிட வேண்டாம்” என்ற வேண்டு கோளுடன் அவர்கள் பேசியதில் இருந்து:

“மார்வாடிகள் கோலோச்சிக் கொண்டி ருக்கும் தமிழ்த்திரையுலகில் தமிழ கத்தைச் சேர்ந்த ஃபைனான்சியர்கள் திருப்பூர் சுப்பிரமணியனும் அன்பும் மட்டும்தான். அன்புச் செழியனைப் பொறுத்தவரை மிக நேர்மையன பைனான்ஸியர்.

எப்போது பணம் கேட்டாலும், தருவார். அதோடு, மற்றவர்கள் 5 அல்லது 5 வட்டிக்கு தரும்போது இவர் 3 வட்டிக்குத்தான் பணம் கொடுக்கிறார். அவரிடம் பணம் வாங்காத திரைத்துறையினரே.. குறிப்பாக தயாரிப்பில் ஈடுபடும் திரைத்துறையினரே இல்லை எனலாம்.

அவர் மோசமான நபராக இருந்தால் இத்தனை பேர் கடன் வாங்குவார்களா.? அவர்கள் எல்லோரும் வாங்கிய கடனை முறையாகத் திருப்பித் தந்துவிடுகிறார்கள். அல்லது திருப்பித்தர முடியாத நிலையில், தங்களது சூழலை அவரிடம் தெரிவிக்கிறார்கள்.

பணத்தையும் திருப்பித் தராமல், தங்களது சூழலையும் சொல்லாமல் ஓடி ஒளிபவர்களிடம்தான் அன்பு, கொஞ்சம் மிரட்டலாக நடந்துகொள்வார்.

அவருக்கும் வேறு வழியில்லை. மற்ற சில நபர்களிடம் குறைந்தவட்டிக்கு பணம் வாங்கி, கொஞ்சம் கூடுதல் வட்டிக்கு அவர் பணம் தருகிறார்.  இவரிடம் பணம் வாங்கியவர்கள் தலைமறைவாகிவிட்டால் இவரது நிலை என்ன.. ஆகவேதான் அது போன்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்.

ஆனால் இவரால்தான் படத்தயாரிப்பாளர் ஜீ.வி. தற்கொலை செய்துகொண்டார் என்று அப்போதே சிலர் வதந்தியைக் கிளப்பினர். அது பொய்.

அந்த நேரத்தில் இப்படி வதந்தி கிளம்பியதை அடுத்து அப்போதைய முதல்வர் ஜெயல்லிதாவே இது குறித்து விசாரிக்கச் சொன்னார். காவல்துறை விசாரணையில் அது பொய் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அப்போதைய சபாநாயகர் காளிமுத்தவுடன், ஜெயல்லிதாவை சந்தித்தார் அன்பு. தன் மீது தவறில்லை என்பதை விளக்கிச் சொன்னார்.  இதை யடுத்துத்தான், அவருக்கு மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலை வர் பதவியை அளித்தார் ஜெயலலிதா.

அன்பு யாரையும் ஏமாற்றியதில்லை. அன்புவைத்தான் பலர் ஏமாற்றி யிருக்கிறார்கள்.

நடிகர் விஷால் 25 கோடி ரூபாய் வாங்கி.. இன்னும் தரவில்லை. “என்னை தயாரிப்பா ளராக்கியது அழகர்தான். அவரை மறக்கவே மாட்டேன்” என்று ஒரு விழா மேடையில் விஷால் பேசியிருக்கிரார். இந்த அழகவர் வேறு யாறுமல்ல… அன்புவின் தம்பிதான்.

அதேபோல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் அன்புவிடம், 30 கோடி வாங்கி, இன்னமும் திருப்பித்தரவில்லை.

சிவி குமார் என்கிற சி.விஜயகுமார் ரூ 10 கோடி வாங்கி இன்னமும் திருப்பித்தரவில்லை.

அதே போல “தாரைத்தப்பட்டை” படத்தில் நடித்த சசிகுமார், ஒரு கட்டத்தில் அந்தப்பட தயாரிப்பை யும் எடுத்துக்கொண்டார். அப்போது அவருக்கு பெரும் பணம் தேவைப்பட்டது. அதனால் அன்பு விடம் .20 கோடி ரூபாய் வாங்கினார். அந்தப் பணத்தைத் தரவில்லை. கேட்டால் படம் தோல்வி அடைந்துவிட்டது. அடுத்த படத்தில் தந்துவிடுகிறேன் என்று கூறி மேலும் சில கோடிகள் வாங்கினார். அதுவும் தரவில்லை.

இந்த நிலையில்தான் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

கையெழுத்துப்போட்டு பணம் வாங்கியது சசிகுமார். ஆகவே அசோக்குமாரிடம் அன்பு பேச வேண்டிய அவசியமே இல்லையே. பிறகு எப்படி மிரட்டியிருப்பார் ஒரு வருடத்துக்கு முன், சசிகுமாரிடம் பயணியாற்றிய உதயகுமார் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார்.

அது போல வேறு காரணத்துக்காக அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். அதை வைத்து அன்பவிடம் வாங்கிய கடனில் இருந்து தப்பிக்க, கடிதம் என்று ஒன்றை வெளியிட்டிருக்கலாம. கடிதத்தில் இருப்பது அசோக்குமார் கையெழுத்துதானா என்பதை காவல்துறை ஆராய வேண்டும்.

அந்தக் கடிதத்தில், “என் உடம்பில் உள்ள காயங்களுக்கு நானே காரணம்..  “ என்று அசோக்குமார் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருப்பவர், ஏன் தன்னை காயப்படுத்திக்கொள்ள வேண்டும்.. அல்லது அவரை தற்கொலை செய்துகொள்ள வற்புறுத்தி யாரேனும் காயப்படுதிதனார்களா  என்ற சந்தேகமும் எழுகிறது. இதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்” என்கிறார்கள் ஃபைனான்சியர் மதுரை அன்புவுக்க நெருக்கமானவர்கள்.

அதோடு, அன்புவையும், அவரது தம்பி அழகரையும் புகழ்ந்து விஷால், ஞானவேல்ராஜா ஆகியோர் பேசிய வீடியோவையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

அந்த வீடியோ….

https://youtu.be/JAiB1vpofmM