யாரிப்பாளர் அசோக்குமார் மறைவு – ஃபைனான்சியர் அன்புச்செழியன்.. விவகாரம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமியும் கருத்து தெரிவித்து ட்விட்டியிருந்தார்.  அவரது கருத்து அன்புசெழியனுக்க ஆதரவாக இருக்கிறது என்று  அந்த பதிவின் பின்னூட்டத்தல் கருத்திட்ட சில பலர், அநாகரீகமாக சீனுராமசாமியை  விமர்சித்தருந்தனர்.

இதனால் மனம் வருந்திய சீனு ராமசாமி, தனது கருத்துக்கு விளக்கம் அளித்தார். இப்போது, தன்னை அநாகரீகமாக விமர்சித்தவர்களுக்கு இறுதியான  விளக்கம் என்று முகநூலில் பதிவிட்டிருக்கிறார். 

அதில் சீனுராமசாமி தெரிவித்திருப்பதாவது:

“சினிமாக்காரர்கள் பெறும் கடனும் வட்டியும் வேறு கூலித்தொழிலாளர்கள் அடையும் கந்துவட்டி வேறு
” உபரிலாபம்” பற்றி பேசும் மார்க்சிய முற்போக்குவாதிகள் கூட என்னை இழிவாக சித்தரிக்க முயல்வது வேதனை தான்.நான் நேசிக்கும் இயக்குநர் சசிக்குமார் ஒரு உறவை இழந்து நிற்கும் வேளையில் அவரை புண்படுத்தக்கூடாது என்பதற்க்காக என் டிவிட்டுகளை நீக்கினேன்.அவரை வைத்து படம் இயக்குவதற்கான சொற்கள் இல்லை
இது இதையும்
கேலி பேசுவோருக்காக சொல்கிறேன்
.என்னை கூட ஒரு தயாரிப்பாளர் ஒப்பந்தமிட வந்து காத்திருக்க சொல்லி பைனான்சியர் தேடிய கதையெல்லாம் என் 12 வருட இயக்குநர் வாழ்வில் உண்டு,ஒரு தமிழ் பைனான்சியர் கறார் பேர்வழி ஆனால் கோடிக்கணக்கில் முதலீடு செய்தவர் அன்பு செழியன்.அதனால் நான் அவ்வாறு டிவிட் செய்தேன்.என்னையும் என் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சன நாகரீகமில்லாமல் பேசியவர்களுக்கு இனியும் என் திரைப்படங்களே சாட்சியாகட்டும்.அன்பும் நன்றியும் என் படைப்பை நேசிக்கும் உங்களுக்கு உரித்தாகட்டும்” என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளா.