நெசமா?: பச்சமுத்துவை சிக்கவைத்த போத்ரா வீட்டில் வைரம் அங்கங்கே கிடக்குமாம்

நெட்டிசன்: வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வெளியாகும் பதிவுகளைத் தரும் பகுதி.

எஸ் ஆர் எம்  பல்கலை வேந்தர் பச்சமுத்துவின் கைதுக்கு காரணம் என சொல்லப்படும் சினிமா சினிமா பைனான்சியர் போத்ரா பற்றி க.திருதணிகாச்சலம் எழுதிய முகலூல் பதிவு:

போத்ரா
போத்ரா

“எஸ் ஆர் எம் பச்சைமுத்து கைதுக்கு காரணமான சினிமா பைனான்சியர் போத்ரா

ஆயிரம் கோடிக்கும் மேல் பணம் புழங்கும் சினிமாவுக்கே பைனான்ஸ் செய்பவர்

ஆனால் அவர் வித்தியாசமான எளிய மனிதர்

ரஜினிகாந்த் தனுஷ் மேல் கூட வழக்கு போட்டிருக்கிறார்

இவருடைய வீட்டிற்கு வேலைக்காரர்களை வைத்துக்கொள்வதில்லை

ஏன் இப்படி இருக்கிறீங்க என்று அவரை சண்டை போட்டேன்

அதற்கு அவர் அப்படியில்லை டாக்டர்.” வீட்லே ஆங்காங்கே வைரம் கிடக்கும் ”

அதையெல்லாம் நாம் பாத்துகிட்டு இருக்க முடியாது என்றார் அலட்டிக்கொள்ளாமல்

இவருக்கு இரண்டு மகன்கள்

மூத்த மகன் வழக்கறிஞர் இல்லாமல் நேரடியாகவே உச்சநீதிமன்றத்தில் வாதாடுவார்

இவருடைய இளைய மகனை அமெரிக்காவுக்கு வைரக் கல் குறித்து ஜெம்மாலஜி படிக்க அனுப்பிவைத்தார்

அப்பா கொடுத்த பணத்தை செலவு செய்யாமலும் உறவினர் வீட்டுக்கும் செல்லாமல் பெட்ரோல் பங்கில் வேலைசெய்து அந்த பணத்தில் செலவு செய்துவிட்டு படிப்பை முடித்துவிட்டு வந்துள்ளார்

25 வயதுக்கும் மேல் வயதுள்ள மகன்கள் அப்பாவைபார்த்து பயப்படுவார்கள்

இவரிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய பாடம் உண்டு

 

கார்ட்டூன் கேலரி