முகக்கவசம் இன்றி காரில் ப‌ய‌ண‌ம் செய்த‌ அதிதி பால‌னுக்கு அபராதம்…..!

கொடைக்கானல் ஏரிச் சாலை பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று ந‌டிகை அதிதி பால‌ன் முகக்கவசம் இன்றி காரில் ப‌ய‌ண‌ம் செய்துள்ளார் . அவருக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதிக்க முய‌ன்ற‌ போது அதிகாரிக‌ளுட‌ன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இத‌னால் சிறிது நேர‌ம் ப‌ர‌ப‌ர‌ப்பு நில‌விய‌து. தொடர்ந்து அவருக்கு மருத்துவத் துறையினர் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்தனர்.