மிழக ரேஷன் கடைகளில், ‘பயோமெட்ரிக்’ எனப்படும், விரல் ரேகை பதிவு வாயிலாக, பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, தமிழகஅரசு  ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டே ஒப்புதல் வழங்கிய நிலை யில், வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள்  இத்திட்டத்தை அமல்படுத்த, தமிழக உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் பெரும்பாலான கார்டுதாரர்கள், அரிசி, கோதுமை உள்பட இலவச ரேசன் பொருட்களையோ, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களையோ வாங்குவதில்லை. இதை ரேசன் கடை ஊழியர்கள், வெளி மார்க்கெட்டில், விற்பனை செய்துவிட்டு, பதிவேட்டில் கார்டு தாரர்களுக்கு வழங்கியது போல  பதிந்து முறைகேடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தற்போது தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும், கார்டுதாரர்கள் வாங்காத இலவச பொருட்களும் வாங்கியதாகவே, அவர் களின் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. நூதனை முறையில் கடை ஊழியர்கள் முறைகேடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரேஷன் கடைகளுக்கு, பயோமெட்ரிக் கருவியை பயன்படுத்தி கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்தவற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்த விரல்ரேவை பதிவை உடடினயாக அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பருங்கள், விரல் ரேவை பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தார், கார்டுதாரர் மட்டுமே ரேசன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க முடியும், இதனால் முறைகேட்டை தடுக்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் நம்புகின்றன.

ஏற்கனவே, ஸ்மார்ட் கார்டுக்காக, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, ‘ஆதார்’ விபரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதனால், பயோமெட்ரிக் கருவி வந்த பின், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள், கடைக்கு வந்தால், அவர்களிடம், விரல் ரேகை பதிவு செய்யப்படும். கருவியில், விரல் ரேகை விபரம், ஏற்கனவே உள்ள ஆதார் கைரேகையுடன் ஒத்து போனால், பொருட்கள் வழங்கப்படும்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக விரல் ரேகை மூலம் மட்டுமே நியாய விலைக்கடைகளில் ரேஷன்  பொருட்கள் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.