Random image

ஃபின்லாந்து கல்விமுறையின் சிறப்பு !

finland

ஹார்வர்ட் கல்வி பேராசிரியர் ஹோவர்ட் கார்ட்னர் ஒரு முறை அமெரிக்கர்களுக்கு ஆலோசனை கூறினார், “மிகவும் பயனுள்ள பள்ளிகள் மற்றும் நாம் அமெரிக்காவில் செய்வதற்கு மாறாகச் செய்யும் பின்லாந்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்”.
அவரது பரிந்துரையைத் தொடர்ந்து, நான் எனது ஏழு வயது மகனை ஜோயென்சூவில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் சேர்த்தேன்.
நான் கண்மூடித்தனமாகக் கார்ட்னர் கூறியதைப் பின்பற்றவில்லை – எனக்கு ஒரு செமஸ்டர் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி இருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னெவென்றால் அந்த ஐந்து மாதங்கள், என் மனைவி, என் மகன் மற்றும் நான் மன அழுத்தமில்லாத, மிகவும் நல்ல, பள்ளி முறையை அனுபவித்தோம். மேற்கத்திய உலகில் மிக உயர்ந்த உலக அளவில் தேர்வு மதிப்பெண்களை உருவாக்கிய வரலாறு பின்லாந்திடம் உள்ளது, அத்துடன் ஒரு கோப்பை அறை முழுவதும் உலக தரவரிசை சாதனைகள் அதிக கல்வியறிவு உடைய தேசம் உட்பட இன்னும் பல சமீபத்திய சாதனைகள் உள்ளது.

பின்லாந்தில், குழந்தைகள் ஏழு வயது வரை சாதாரண கல்வி பயிற்சி பெறுவதில்லை. அதுவரை, பல குழந்தைகள் காப்பகங்களிலிருந்து நாடகம், பாடல்கள், விளையாட்டுகள் மற்றும் உரையாடல்மூலம் கற்றுக்கொள்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் சிறு வயதிலேயே பள்ளிக்கு நடந்தோ அல்லது பைக்கிலோ செல்கின்றனர். பள்ளி நேரம் குறுகியதாகவும் வீட்டுப்பாடம் குறைவாகவும் உள்ளது.

இடைவேளையின் குறைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள பல பள்ளிகள் போலல்லாமல், பின்லாந்து பள்ளிக்குழந்தைகளுக்கு கட்டாயமாக 15 நிமிட வெளிப்புற இலவச விளாயாட்டு இடைவெளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் இருக்கிறது. நல்ல காற்று, இயற்கை மற்றும் வழக்கமான உடல் பயிற்சி இடைவேளை ஆகியவை கற்றலுக்கு முக்கியமாகக் கருதப்படுகின்றன. ஒரு பின்னிஷ் மாக்சிம் படி, “மோசமான வானிலை இல்லை. போதுமான ஆடை மட்டும் தான் இல்லை.”
finland
ஒரு நாள் மாலை, நான் என் மகனிடம் அவன் அன்றைய உடற்பயிற்சி வகுப்பில் என்ன செய்தான் என்று கேட்டேன். “அவர்கள் ஒரு வரைபடம் மற்றும் திசைகாட்டியுடன் எங்களைக் காட்டுக்குள் அனுப்பினர், நாங்கள் வழி கண்டுபிடித்து வெளியே வர வேண்டியிருந்தது,” என்று அவன் கூறினார்.
பின்லாந்து தரம் குறைந்த வெகுஜன வழக்கமான தேர்வுகளில் நேரத்தையோ பணத்தையோ வீணாக்குவதில்லை. சதை மற்றும் இரத்த ஆசிரியர்கள் – அதற்குப் பதிலாக, மிக உயர்ந்த தரமான “தனிப்பட்ட கற்றல் சாதனம்” என்கிற ஆசிரியர்களின் கவனத்தில் குழந்தைகள் ஒவ்வொரு நாளும், நேரடி கண்காணிப்பில் மூலம், பதிவுசெய்தவைகள் மூலம் மற்றும் உடனடி கேள்விகள்மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றனர்.

வகுப்பில் அவ்வப்போது குழந்தைகள் வேடிக்கைப் பார்க்கவும் சிரிக்கவும் பகற்கனவு கானவும் அனுமதிக்கப்படுகிறார்கள். பின்லாந்துக்காரர்கள் நான் அடிக்கடி கேட்ட கலாச்சார மந்திரங்களை நடைமுறைப்படுத்திகின்றனர், “குழந்தைகள் குழந்தைகளாக இருக்கட்டும்,” “ஒரு குழந்தையின் வேலை விளையாடுவது”, “குழந்தைகள் விளையாட்டின் மூலம் சிறப்பாகக் கற்கின்றனர்”.

வழக்கமான வகுப்பறையில், ஆரோக்கிய மனநிலை, பாதுகாப்பான, மரியாதையான மற்றும் மிகவும் உதவிகரமான சூழலாக இருக்கும். நேர்க்கோடுகளில் நடக்கவோ நேராக உட்காரவோ எந்த உரைகளிலிருந்து பாடங்கள் படிக்கவோ கட்டாயமில்லை. பின்லாந்தில் படிக்கும் ஒரு சீன ச்மாணவர்-ஆசிரியர் என்னை ஆச்சரியப்படுத்தினர், “சீன பள்ளிகளில் இருப்பது இராணுவத்தில் இருப்பது போலிருக்கும். இங்கே ஒரு நல்ல குடும்பத்தில் ஒரு பகுதியாக இருப்பது போலத் தோன்றுகிறது.” அவர் நிரந்தரமாகப் பின்லாந்தில் இருப்பது எப்படி எனக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

பின்லாந்தில் டாக்டர்களுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் தான் மிகவும் நம்பகமான மற்றும் போற்றப்படும் மனிதர்களாக இருக்கின்றனர், ஏனெனில் அவர்கள் ஆராய்ச்சி மற்றும் வகுப்பறை நடைமுறையில் சிறப்புக் கல்வியோடு ஒரு முதுகலை பட்டம் பெற வேண்டும்.
“அரசியல்வாதிகளிடமிருந்து நம் குழந்தைகளைப் பாதுகாப்பதே பெரியவர்களாகிய நமது நோக்கம்,” என்று ஒரு பின்னிஷ் சிறுவயது கல்விப் பேராசிரியர் கூறினார். “தொழிலதிபர்களை எங்களது கட்டிடத்திற்குள் வரக்கூடது என்று கூறும் நெறிமுறை மற்றும் தார்மீக பொறுப்பும் உள்ளது.” உண்மையில், எந்தப் பின்னிஷ் குடிமகனும் அவர்கள் விரும்பும் போதெல்லாம் எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் அவரது செய்தி தெளிவாக இருந்தது: கல்வியாளர்கள் தான் கல்வியின் இறுதியான அதிகாரிகள், மற்ற அதிகாரிகளோ தொழில்நுட்ப வியாபாரிகளோ அல்ல.