பெங்களூரு:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உருவாக்கப்பட்ட பிஎம். கேர்ஸ் நிதி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது கர்நாடக மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நாட்டில் எந்தவொரு அவசர நிலை மற்றும் பேரிடர் போன்ற சூழ்நிலைகளை கையாள்வதற்காக,  PM CARES Fund என்ற பெயரில் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி வழங்கும்படி பிரதமர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதிகள் குவிந்தது.
இதன் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கடந்த மே 11ம் தேதி  காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கர்நாக மாநிலம் சிவமோகா பகுதியைச்சேர்ந்த பாஜகவினர் காவல்துறையினர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்போரில்,  காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உட்பட சில காங்., தலைவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 505 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பதிவு:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவில், ”கொரோனா பாதிப்பு காலத்தில் மக்கள் நலனுக்காக முடிவெடுக்க வேண்டிய நிலையில் பிரதமர் மோடி அந்தத் தேவைக்கு எதிரானவர்.
பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன. வெளிப்படைத்தன்மை இல்லை. ரகசியம் எப்போதும் கெட்ட விஷயங்களுக்கான வழி. மக்கள் நலனைப் பற்றி நினைக்காமல் வாழ்ந்த பிரதமர் மோடி என்று வரலாறு நினைவுபடுத்தும். சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடையான பிபிஇ கிட் குறித்து கவலைப்படாதவர் பிரதமர் மோடி” எனத் தெரிவித்திருந்தது.