லஞ்ச வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் சிக்கினார் : அதிர்ச்சி தகவல்

டில்லி

பிரபல தொழிலதிபர் மொயின் குரேஷி வழக்கில் ரூ 2 கோடி லஞ்சம் வாங்கியதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு சிபிஐ பிரிவு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. இந்த சிபிஐ யின் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா. இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு பேட்சில் குஜராத் மாநிலத்தில் ஐ ஏ எஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கபட்டவர் ஆவார். இவர் தற்போது சிபிஐ பிரிவின் சிறப்பு இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.

சமீபத்தில் மொயின் குரேஷி என்னும் தொழிலதிபர் சம்பந்தப்பட்ட வழக்கில் இடைத்தரகர் மனோஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று நீதிபதியிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு மொயின் குரேஷி வழக்கு தொடர்பாக தாம் ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.  இதை ஒட்டி ராகேஷ் அஸ்தானா சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

ஏற்கனவே லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தலையிட்டதாக அஸ்தானா தெரிவித்திருந்தார். அதற்கு அஸ்தானா மீது ஏராளமான புகார்கள் உள்ளதாக அலோக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.