குஜராத்:
குஜராத்தில் உள்ள சர்தார் சிலையை 30,000 கோடிக்கு விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

சமீபத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலையை திறந்து வைத்தார்

இந்த நிலையில் இந்த சிலை விற்கப்பட இருப்பதாகவும் அதன் விலை முப்பதாயிரம் கோடி என்றும் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்டது

இதனை அடுத்து குஜராத் போலீசார் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அரசுக்கு சொந்தமான ஒரு சிலையை 30,000 கோடிக்கு விற்பனை செய்ய இருப்பதாக ஆன்லைனில் விளம்பரம் வெளிவந்துள்ளது. மேலும் அந்த விளம்பரத்தில், கொரோனா பாதிப்பாக்கான மருத்துவ கட்டமைப்புகளை செய்து கொள்ள இந்த சிலை விற்பனை செய்யப்படுவதாகும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விளம்பரத்தை வெளியிட்ட நபரை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.