அமிர்கானின் 80 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு..!

மும்பை :-

அமிர் கான் மற்றும் கிரன் ராவ்
அமிர் கான் மற்றும் கிரன் ராவ்

நடிகர் அமிர்கானின் மனைவி கிரன் ராவ் வீட்டிலிருந்து 80லட்சம் மதிப்புள்ள நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளார்களாம் இதையடுத்து காகர் காவல் நிலையத்தில் கிரன் ராவ் புகார் அளித்துள்ளார்.

பாலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இன்று அங்கு ஒரு சூப்பர் ஸ்டாராகா உள்ள நடிகர் அமிர்கானின் மனைவியின் வீட்டில் இருந்த வைர நகைகள் தங்க நகைகள் என சுமார் 80 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளது அங்கு இருக்கும் பாலிவுட் நட்சத்திரங்களை கிரங்கடித்துள்ளது இந்த செய்தி.

இந்த புகாரின் பெயரில் இப்போது போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் முதல் கட்டமாக அக்கம் பக்கத்தில் இன்னும் எதாவது திருடி சென்றுள்ளார்களா என்று விசாரித்து வருகின்றனர்.

அமிர்கானின் நடிப்பில் டங்கல் திரைப்படம் அடுத்த மாதம் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து இவரின் மனைவி கிரன் ராவ் இயக்கத்தில் தோபி காட் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.