பெண் காவல் அதிகாரியைத் தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு

மும்பை

ரிபப்ளிக் டிவி முதன்மை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி மீது பெண் காவல் அதிகாரியைத் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆர்கிடெக்ட் ஒருவர் 5 வருடம் முன்பு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.  .

அவர் தனது மரணத்துக்கு ரிபப்ளிக் டிவி முதன்மை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி காரணம் என எழுதி வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.

அதற்காக அர்னாப் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினருக்கும் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அதில் பெண் காவல் அதிகாரி ஒருவரை அர்னாப் கோஸ்வாகி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

எனவே அர்னாப் கோஸ்வாமி மீது பெண் காவல் அதிகாரியைத் தாக்கியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

You may have missed