யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர் தொடர்புடைய ஏழு நிறுவனங்களில் சிபிஐ அதிரடி சோதனை…

மும்பை

பிரபல தனியார் வங்கியான யெஸ்வங்கி, நிதிச்சுமை காரணமாக திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது வங்கியை ரிசர்வ் வங்கி கைப்பற்றி நிர்வகித்து வருகிறது.

திவாலாகும் நிலையில் உள்ள அறிவிக்கப்பட்ட யெஸ் வங்கியின் நிறுவனர் ரானா கபூரை மார்ச் 8 அன்று கைது செய்த சிபிஐ இம்மாதம் 11 ஆம் தேதிவரை அமலாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த சூழலில், யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர் குடும்பத்தினர் மீதும் சிபிஐ  தனது பிடியை இறுக்கயுள்ளது. மேலும், கபூருக்கு தொடர்புடைய ஏழு நிறுவனங்களில் அடிரடி சோதனை நடத்தி வருகிறது…

யெஸ் வங்கியின் நிறுவனர் ரானாகபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பணமோசடி வழக்கில் CBI வழக்கு பதிவு செய்துள்ளதை தொடர்ந்து, இன்று மும்பையிலுள்ள கபூரின் வீடு, மனைவி மற்றும் மகள்களின் பின்னணியில் இயங்கும் நிறுவனங்கள் உட்பட ஏழு இடங்களில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிரடி சோதனை நடத்தியது.

இந்த சோதனைகளின்போது  ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், ஆவணங்கள் அடிப்படையில் வங்கியின் மோசமான நிதிநிலை சரிவிற்கு கபூர் மற்றும் குடும்பத்தினரே அடிப்படைக் காரணம் எனக் குற்றம் சாட்டிய சிபிஐ, IPC 420 மற்றும் 120(B) ஆகிய பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது.

இவர்களுடன் பிரபல தொலைக்காட்சி ஊடகமான இந்தியா டுடே டிவி, ரானாவின் மனைவி பிந்துகபூர், மகள்களான ராதா, ரோஹினி மற்றும் ராக்கி உள்ளிட்ட 12 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

2018 ஏப்ரல் முதல் ஜூன் வரை ரானாகபூரின் குடும்ப நிறுவனமான DHFL நிறுவனத்திற்கு எவ்வித ஆவணங்களோ, லாபநோக்கமோ இன்றி 37000 கோடிவரை கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 600 கோடிவரை வாராக் கடனும் உள்ளது. கடன் வழங்கப்பட்டுள்ள பல நிறுவங்களில் நூறு சதவீத பங்குதாரராக கபூர் குடும்பத்தினரே உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.