புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் பணி நடந்துவருகிறது. இயற்கை வளத்தைப் பாதிக்கும் என்பதாலும், விபத்து ஏற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதாலும் மக்கள் இத் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று மத்திய அரசின் பெட்ரோலிய துறை, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்த வித பாதிப்பும் இல்லை” என்று நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில், நெடுவாசல் அருகே, 26 வருடங்களுக்கு முன் பெட்ரோலிய துறை அமைத்த சோதனை எண்ணை கிணறு இன்று தீ பிடித்து எரிந்தது. நெடுவாசல்அருகே வானக்கன்காடு பகுதியில் 1991ம் ஆண்டு இந்த எண்ணை கிணறை பெட்ரோலியத்துறை அமைத்தது.

தீ விபத்து ஏற்பட்டதும் மக்கள் அதை அணைத்தனர். ஹைட்டோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அங்கும் போராட்டத்தைத் துவங்கினர்.