குடந்தை கும்பேஸ்வரர் கோயிலில் தீ விபத்து

குடந்தை:

குடந்தை ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

தஞ்சை மாவட்டம் குடந்தையில் உள்ள ஆதி கும்பபேஸ்வரரர் கோயில் மிகவும் பிரசித்த பெற்றது. சிவராத்திரயை முன்னிட்டு அங்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இதனால் நடன கலைஞர்களுக்கு உணவு தயாரிக்கும் போது காஸ் சிலிண்டரில் இருந்து தீ பரவியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவ தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்களும், ஊழியர்களும் ஓடி டந்து போராடி தீயை அனைத்தனர்.

இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கு காயம் ஏற்பட்டதா? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.