சென்னை நுங்கம்பாக்கம் அருகே பொம்மை தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து!

சென்னை:

சென்னையின் மையப்பகுதியான வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், தீ பிடித்த நிறுவனம், பொம்மை தயாரிப்பு தொழிற்சாலை என்பது தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தீ விபத்துகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து,  5 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில்,  வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம் பகுதிகளில்  நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை என்றும்,  தொழிற்சாலைக்கு அருகே உள்ள  டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட  மின்கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்தில், பொம்மை தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.