டுமீல் குப்பத்தில் திடீர் தீவிபத்து: குடிசைகள் எரிந்து சாம்பல்

சென்னை டுமில் குப்பத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், 100க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாயின.

சென்னை டுமில் குப்பத்தில் இன்று காலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குடிசை பகுதிகளில் சிலிண்டர்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இரு வீடுகளில் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, 100 வீடுகள் ஏரிந்து சாம்பலாயின. இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன், அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீவிபத்து காரணமாக சென்னை பட்டினப்பாக்கம் பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதால், போக்குவரத்து நெரிசல்களும் அதிகரித்துள்ளன.