மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து

சென்னை மண்ணடியில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சென்னை மண்ணடியில் அமைந்துள்ளது பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதியின், அலுவலக காவலாளரிடம் இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். பின்னர் காவலாளர் அலுவலகத்தின் தரைத்தளம் பகுதிக்கு சென்று பார்த்தபோது, முதல் தளம் வரை தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் கடும் புகை மண்டலமாக அலுவலகம் இருந்துள்ளது.

பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.