பழனி : கோவில் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

ழனி

மிழகத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவில் உள்ளது.   இந்த கோவில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.    இது தொடர்பாக அறநிலையத்துறை ஸ்தப்தி முத்தையா மற்றும் இணை ஆணையர் ராஜா கைது செய்யப்பட்டுளார்.    இந்த வழக்கு குறித்து சிலை கடத்தல் ஐஜி பொன் மாணிக்கவேல் தமக்கு அர்சு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறி இருந்தார்.

இந்த பழனி கோவிலின் தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று திடீரென கரும்புகை வெளியேறியது.   பயந்து போன அலுவலக ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.    தீ மளமளவென பரவி உள்ளது.    சுமார் ஒரு மணி நேரம் போராடி பழனி தீயனைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது.    மேலும் இந்த தீயில் முக்கிய ஆவணங்கள் ஏதும் எரிந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.  இரு ஏசி இயந்திரங்கள் இவ்விபத்தில் சேதம் அடைந்துள்ளன.    சிலை சேதம் குறித்த வழக்கு நடைபெறும் நேரத்தில் இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மனத்தில் பல சந்தேகங்களை உண்டாக்கி உள்ளது.