கிரீஸ் : பயங்கர காட்டுத் தீயில் 24 பேர் மரணம்

தென்ஸ்

கிரீஸ் நாட்டில் எற்பட்ட பயங்கர காட்டுத் தீ விபத்தில் 24 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இரு இடங்களில் நேற்று கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.   அது மேலும் பரவி வருகிறது.   இன்று அதிகாலை வரை  அந்தத் தீ முழுவதும் அணைக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீவிபத்தில் சிக்கி 24 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  படுகாயத்துடன் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   மருத்துவமனையில் சுமார் 11 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.   அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்களும் பேரிடர் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.   இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.    கிரீஸில் இதுவரை நடந்த தீ விபத்துக்களில் இதுவே மிகவும் கடுமையானது என கூறப்படுகிறது.