மும்பை ஈஎஸ்ஐ மருத்துவமனை தீ விபத்து: பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு

அந்தேரி:

மும்பை அந்தேரி மரோல் பகுதியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயம் அடைந்த 140க்கும் மேற்பட்டோர் வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘காம்கார்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஈஎஸ்ஐ மருத்துவமனை மும்பை அந் தேரி பகுதியில் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினசரி சிகிச்சை பெற்றும், தங்கியிருந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் 4வது மாடியில் நேற்று மாலை திடீரென தீ பிடித்தது. மளமளவென தீ பரவியதாலும், அதனால் ஏற்பட்ட புகையாலும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்கள். பலர் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையின்ர விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினர், நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் ஏராளமான நோயாளிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. பலர் புகையின் தாக்கம் காரணமாக மயக்க நிலையை அடைந்தனர்.

மீட்கப்பட்ட அனைரையும், கூப்பர், செவன்ஹில்ஸ் உள்பட பல்வேறு மருத்துவ மனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 6 மாத குழந்தை உள்பட 8 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 140க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில்,  தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று மஹாராஷ்டிர அரசு அறிவித்து உள்ளது. பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

You may have missed