சுரேந்திர ரெட்டி இயக்கத்ததில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதிப், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘ஷே ரா நரசிம்ம ரெட்டி’.

இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வருடமே தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

ஹைதராபாத்தில் கோகாபட் என்ற இடத்தில் சிரஞ்சீவியின் வீட்டில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது , திடீரென வீடு மற்றும் செட் முழுக்க தீ பரவி எல்லாம் கருகியுள்ளது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, உயிர் சேதம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.