தாம்பரம் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 20 கடைகள் எரிந்து நாசம்

சென்னை:

 தாம்பரம் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர  தீ விபத்தில்  20க்கும் மேற்பட்ட  கடைகள் எரிந்து நாசமாகின. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

சென்னை தாம்பரம் சண்முகா சாலையில் உள்ள மார்க்கெட் பகுதியில் பாரதி திடல் எனுமிடத்தில் பழங்கள், வளையல் கடை, காய்கறி கடை, துணிக்கடை என 20க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் இயங்கி வந்தன.

இந்த கடைகளில் நள்ளிரவு எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அனைத்து கடைகளும் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த  தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் சாம்பலாகின.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்து உள்ளனர்