Random image

முள்ளிவாய்க்கால் முற்றம் – ம.நடராசன் நினைவிடம் அருகே தீ விபத்து

ஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம்  – ம.நடராசன் நினைவிடம் அருகே தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவாக தஞ்சை விளார் அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்  06-11-2013 அன்று திறக்கப்பட்டது. இம்முற்றத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.

இந்த நினைவுச்சின்னம் உருவாவதில் மறைந்த தமிழரசி இதழின் ஆசிரியரும் அமமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவருமான ம.நடராசன் பெரும்பங்கு வகித்தார். கடந்த மார்ச் மாதம் அவர் இறந்தபிறகு இதே பகுதியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதே பகுதியில் “பாலச்சந்திரன் தேநீரகம்” என்ற  சிறு உணவுவிடுதி செயல்படுகிறது.

இந்த விடுதியில் சற்று முன் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையின் பெரும்பகுதி எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்துவந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்ததனர். இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.