விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில்  ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. சேத விவகாரம் இதுவரை வெளியாகவில்லை.

விழுப்புரம் மாவட்டம், வானூரை அருகே உள்ள கரசானூர் சித்தேரி கரை பகுதியில்  அமைந்துள்ள இருளர் காலனியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இது மளமளவென அக்கம்பக்கம் உள்ள வீடுகளிலும் பரவியது. இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். உடனே தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினனர் தீயை கட்டுக்குள்கொண்டு வந்தஅணைத்தனர்.

இந்த தீ விபத்தில்,  அப்பகுதியில் உள்10 குடிசை வீடுகளும் முழுவதுமாக எரிந்து நாசமாகின. மேலும் சில குடிசை வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தீ விபத்தில் வீட்டிலிருந்த உடமைகள், பத்திரங்கள், கட்டில், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமாகின என்று அந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் இல்லை.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில்,  இருளர் காலனியில் உள்ள மைதிலி என்பவர் சமைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்து, பின்னர் அருகருகே உள்ள வீடுகளில் பரவியதாக கூறப்படுகிறது.

கூரை வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார்

தீ விபத்தில் வீடுகளை இழந்த அனைவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.