மீண்டும் தீ விபத்துக்குள்ளான மீனாட்சி அம்மன் கோவில்

துரை

துரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடும் தீ விபத்து ஏற்பட்டது.   அதை ஒட்டி கோவில் வளாகத்தில் கடை வைப்பதற்கு தடை,  அதை எதிர்த்து வழக்கு என பல சம்பவங்கள் நடந்தன.    இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்னும் கோவில் நிர்வாகம் சரி செய்யாமல் உள்ளது.

இந்தக் கோவிலில் சுவாமி சன்னிதி மற்றும் மகாலட்சுமி சன்னிதி அருகே பொற்கொடி சன்னிதி அமைந்துள்ளது.     அங்கு நேற்று பக்தர்கள் தரிசனம் செய்துக் கொண்டு இருந்த நேரத்தில் திடீரென அந்த சன்னிதியில் தீப்பிடித்தது.    பாதுகாப்பு ஊழியர்கள விரைந்து சென்று உடனடியாக தீயை அணைத்தனர்.    தீயை அணைக்கும் வரை பக்தர்களை அனுமதிக்கவில்லை.

இது குறித்து கோவில் ஊழியர்கள், ‘கோவிலில் சாமி சன்னிதி பகுதியில் பக்தர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   இந்த இடத்தில் சூடம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.   ஆனால் நேற்று பக்தர் ஒருவர் சூடத்தை ஏற்றி உள்ளார்.

அப்போது அருகில் இருந்த எண்ணெய் டப்பாவில் தீ பிடித்துள்ளது.    அந்த நேரத்தில்  பாகு காவலர்கள் அதிகம் இருந்ததால் உடனடியாக தீயை அணைத்து விட்டோம்.    அத்துடன் சூடம் ஏற்றிய பக்தர் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளார்.” என தெரிவித்தனர்,

இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/