சென்னை அரசு  ஸ்டான்லி  மருத்துவமனையில் தீ

சென்னை வண்ணாரபேட்டை பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின்  முதல் மாடியில் உள்ள நோயாளிகள்  அறையில்  குளிர்சாதன பெட்டிகள் தீப்பிடித்தன. இப்பெட்டிகளில் இருந்து புகை வெளியானது. இதனால் பீதி அடைந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அந்த தளத்தைவிட்டு ஓடி தப்பினர்.

கடந்த பிப்ரவரி மாதம் இதே மருத்துவமனையின் விடுதியில் தீ பிடித்தது குறிப்பிடத்தக்கது.