சென்னை சில்க்ஸ் அருகே ஓட்டலில் தீ! பரபரப்பு

சென்னை,

பெரும் தீவிபத்து காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  தன் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக  அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கப்பட்டு வருவதால்,  நேற்றுவரை கட்டிடத்தின் 100 மீட்டர் சுற்றளவிலான கடைகள் திறக்கப்படாத நிலையில் இன்று 50 மீட்டருக்கு உட்பட்ட கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகே உள்ள ஓட்டல்  சமையல் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.   தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் அடுத்த சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர்.

பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகிலேயே ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தீவிபத்து காரணமாக  உஸ்மான் சாலையிலும், அருகிலுள்ள பாலத்தின் மீதும் இன்றுவரை போக்குவரத்து தடை செய்யப்பட்டே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary
Fire at Hotel near Chennai Silks!